கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பயணித்த கார் மீது  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசம் – அல்ஹிலால் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் அவரின் காரை பின்தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதலில், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எனினும் அவர் பயணம் செய்த கார் சேதமடைந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராளன ஆரிப் சம்சுதீன் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Ceylon Muslim

Post A Comment: