தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 8, 2019

UNHRC ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று வெளியாகலாம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று வெளியாகலாம் என நம்பப்படுகிறது.

எதிர்வரும் 20 ஆம் திகதி இந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நேற்று குறித்த அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்தின் அடிப்படையில், அந்த தீர்மானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை இன்று இந்த அறிக்கை பகிரங்கமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Post Top Ad

Your Ad Spot

Pages