கொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகளுடன் சிலர் கைது

கொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய தேடுதலில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

குறித்த கைக்குண்டுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய அளவில வெடிக்கக் கூடியவை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...