குடிபோதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது


கடந்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த காலப்பகுதியில் 26,425 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பண்டிகைகாலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்காக நாடளவிய ரீதியில் தொடர்ந்தும் இந்த சுற்றிவளைப்பு ஈடுபட்டு வருதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...