தற்கொலையாளிகளின் சடலங்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லை : ACJU

ஞாயிறு தினம் பயங்கரவாத தாக்குதல்களை நடாத்தியவர்களுடைய சடலங்களை இலங்கை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லையென தெரிவிக்கிறது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா.

இன்றைய தினம் ஜம்மியா ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதோடு இலங்கை முஸ்லிம்கள் குறித்த பயங்கரவாத குழுவின் தலைவர் பற்றி 2017ம் ஆண்டே தகவல் வழங்கியிருக்கும் நிலையில் அதன் பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியவர்களே சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் விளக்கமளித்திருந்தது.


இதேவேளை, நாட்டின் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் முகம் மூடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்கும் ஆலோசனை வழங்குவதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்கொலையாளிகளின் சடலங்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லை : ACJU தற்கொலையாளிகளின் சடலங்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லை : ACJU Reviewed by Ceylon Muslim on April 25, 2019 Rating: 5