கஞ்சிபான இம்ரான், கக்கியுள்ள புதிய விசயங்கள்..!!

மாகந்துர மதுஸுடன் தொடர்பு வைத்துள்ள இலங்கை அரசியல்வாதிகள், பொலிஸ் உயரதிகாரிகள் பலரின் பெயர் விபரங்கள் அடங்கிய தகவல்கள் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையிலுள்ள கஞ்சிபான இம்ரானிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இருந்து வெளிவந்துள்ளது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச பத்திரிகையொன்று இன்றைய தினம் -08- செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

இதற்கு மேலதிகமாக மாகந்துர மதுஸுக்கு இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளுடனான தொடர்புகள் பலவும் வெளிவந்துள்ளன. இதற்கிணங்க மதுஸுக்கு இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் பல தொடர்பாகவும் தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

அந்த வர்த்தக நிறுவனங்களுள் தெற்கிலுள்ள உல்லாச பிரயாண ஹோட்டலொன்றும் உள்ளடங்குகின்றது. அந்த ஹோட்டலை வேறொரு நபரின் பெயரில் மதுஸ் நடத்தி செல்வதும் மற்றும் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றையும் மதுஸ் ஆரம்பித்துள்ளதாகவும் கஞ்சிபான இம்ரான் தகவல் வெளியிட்டுள்ளார்.

மதுஸுக்கு சொந்தமான காணிகள் பல நாடெங்கிலும் பல்வேறு பிரதேசங்களில் உள்ளதாகவும், காணிகளை விற்பதற்கான வர்த்தகமொன்றும் மதுஸினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மதுஸுக்கு மாத்திரமின்றி கஞ்சிபான இம்ரானுக்கும் கொழும்பு நகரில் சொத்துக்கள் உள்ளதாகவும் தகவல்களிலிருந்து தெரியவருகிறது.

கஞ்சிபான இம்ரான் அரசியல்வாதிகள், பொலிஸ் உயரதிகாரிகள் பலரினதும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அந்த உயரதிகாரிகளில் ஓய்வு பெற்றுள்ள இரண்டு அதிகாரிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சிபான இம்ரான் துபாயிலிருந்த போது கொழும்பு பொலிஸ் நிலையங்கள் பலவற்றிலும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிகள் பலருடனும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவ்வேளையில் மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கஞ்சிபான இம்ரானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

2015ஆம் ஆண்டு மாக்கந்துர மதுஸை துபாய்க்கு அழைத்து சென்றதில் தமக்கு பங்களிப்பு உள்ளதாகவும், அங்கு முதலீட்டு விசாவை தயாரித்து வழங்கியதும் தாமே என்றும் கஞ்சிபான இம்ரானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இரந்து தெரியவருகிறது.

மாகந்துர மதுஸ் தொடர்பில் இலங்கையிலுள்ள ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை தானே அங்கு தெரிவித்ததாகவும், தாம் அதிக குற்றச்செயல்களை செய்வதற்கு அவரே தம்மைத் தூண்டியதாகவும் கஞ்சிபான இம்ரான் தெரிவித்துள்ளார்.

மாகந்துர மதுஸ் தனது மகளின் பிறந்தநாளை பெரியளவில் கொண்டாடுவதற்கு தீர்மானித்து இலங்கையிலுள்ள அவரது சகாக்களை அதில் கலந்து கொள்ள செய்வதற்கும் தீர்மானித்தமையானது அவரது பலத்தை காண்பிப்பதற்காகவே என்றும் கஞ்சிபான இம்ரான் விசாரணைகளின் போது தெரிவித்திருந்தார்.

மதுஸ் போதைப்பொருள் விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்கையில் தாம் அதைத் தடுத்ததாகவும், அதிக பிரச்சினைகள் உள்ளதால் நாம் அவ்வாறு செய்ய கூடாது என்று கூறியதாகவும் அவர் அதனை செவிமடுக்க மறுத்து விருந்துபசாரத்தை நடத்தினார் என்றும் கஞ்சிபான இம்ரான் தெரிவித்துள்ளார்.

அந்த விருந்துபசாரத்திற்கு கஞ்சிபான இம்ரான் கடைசி நேரத்திலேயே வருகை தந்துள்ளார். தாமும் தமது மனைவி, பிள்ளைகள் அந்த விருந்துபசாரத்தில் கலந்து கொள்ள போவதில்லையென்று தீர்மானித்திருந்த போது மதுஸ் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நச்சரித்ததாகவும் அவர் விசாரணைகளில் இருந்து தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment