தான் அமைச்சரவை கூட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையில் காணப்படுகின்ற பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரை தான் அமைச்சரவை கூட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனமொன்று, மற்றுமொரு அரசாங்க நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்கின்ற செயற்பாட்டை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாட்டினால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...