கல்முனை விடயம் : நேற்று ரணிலுக்கு வேட்டு வைத்த முஸ்லிம் தலைவர்கள்..!பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (05) வரவுசெலவு செலவு திட்டம் மீதான, இறுதி வாக்கெடுப்பு நடைபெறும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

இந்நேரத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை எப்படியாவது பெற்றுவிட, ரணிலிடமிருந்து ஒப்புதல் பெற தமிழ் கூட்டமைப்பு துடியாய் துடித்துக் கொண்டிருந்தது.அந்தவகையில் ரணில் இதற்கு தனது ஒப்புதலையும் அறிவித்து, அதற்கான முன் ஆயத்தங்களில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு உயர் அதிகாரிகளும் ஈடுபட்டிருந்தனர்.

ரணிலின் ஒப்புதலுடன், கல்முனை தனி தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கப்படப் போகிறது, என்ற செய்தி முஸ்லிம் அரசியல்வாதிகளின் காதுகளுக்கு சென்றடைகிறது.வரவுசெலவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெற, இன்னும் 30 நிமிடங்களே இருக்கிறது.

அவசரமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுகூடி, பிரதமர் ரணிலில் அலுவலகத்தை முற்றுகையிடுகின்றனர். இந்த முற்றுகையில் அமைச்சர்களான ஹக்கீம், றிசாத் ஆகியோரும் பங்கேற்கின்றனர். சில முஸ்லிம் எம்பி.க்கள் ரணில் மீது சீறீப் பாய்கின்றனர்

தமிழ் கூட்டமைப்பின் ஆதரவின்றி வெற்றி பெறலாம், ஆனால் முஸ்லிம்களின் ஆதரவின்றி ரணில் அரசாங்கத்தினால் வெற்றிபெற முடியாது. தனி தமிழ் பிரதேச செலகத்தை உருவாக்கும் திட்டத்தை ரணில் கைவிடவில்லை என்றால் 95 சதவீதமான முஸ்லிம்களின் வாக்குகளை ரணிலுக்கு எதிராக மாற்றிக்காட்டுவோம் எனவும் மிரட்டுகின்றனர்.

தமிழ் கூட்டமைப்பின் வாக்குகள் சம்பந்தன் அணி, விக்னேஸ்வரன், கஜந்திரன், பிள்ளையான், கருணா என பிரிந்துள்ளன. அதனால் தமிழ் கூட்டமைப்பின் பலம் முன்னர் போன்று அல்ல என சுட்டிக்காட்டப்படுகிறது.

பிரதமரின் அலுவலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதரவளிக்கவில்லையென்றால், வரவுசெலவு திட்டம் தோல்வியடையும் என்ற நிலையை புரிந்துகொண்ட ரணிலும் அவரது சகாக்களும் கல்முனையில் தனி தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கும் திட்டத்தை நிறுத்த ஒப்புக்கொள்கின்றனர்.

இதன்பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்ற சபைக்குத் திரும்பி வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

jm
கல்முனை விடயம் : நேற்று ரணிலுக்கு வேட்டு வைத்த முஸ்லிம் தலைவர்கள்..! கல்முனை விடயம் : நேற்று ரணிலுக்கு வேட்டு வைத்த முஸ்லிம் தலைவர்கள்..! Reviewed by Ceylon Muslim on April 06, 2019 Rating: 5