வெற்றுக் காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன


-பாறுக் ஷிஹான்-
வெற்றுக் காணியில்  புதைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலையில சர்வோதய அமைப்பின் அலுவலகத்துக்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் குறித்த வெடிபொருட்கள் ஞாயிற்றுக்கிழமை(7) மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காணியைத் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்ற வேளை பெக்கோ இயந்திரம் மூலம் துப்பரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.இந்தப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் இரண்டு பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் காணப்படுவதைத் துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவதானித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் வெடிபொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து நடைபெற்று வந்த துப்பரவுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெற்றுக் காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன வெற்றுக் காணியில்  புதைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன Reviewed by NEWS on April 08, 2019 Rating: 5