தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Apr 21, 2019

தேவாலயங்கைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுநாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளானது. இதையடுத்து சுமார் 140க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டிலுள்ள பல தேவாலயங்கைச்சுற்றி  பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இன்று காலை இடம் பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து சம்பவம் இடம் பெற்றுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.குறித்த குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் பொலிஸார் முன்னெடுக்கின்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து நடவடிக்ககைகளில் ஈடுப்படுவதையும் முடிந்த வரையில் குறைத்துக் கொண்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முழுயையான ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post Top Ad

Your Ad Spot

Pages