வடக்கு ஆளுனரை காப்பாற்றிய முன்னணியின் சட்டத்தரணி மணிவண்ணன்…!


கிளிநொச்சி உணவக வழக்கில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நீதிமன்றில் ஆஜராகாமல் தடுக்க மணிவண்ணன் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் தேசிய அமைப்பாளரான இவர் ஆளுநரின் கௌரவத்தை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி பலராலும் பராட்டப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் சதியை உடைத்து ஆளுநரை காப்பாற்றியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன்.
மேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது;
கிளிநொச்சி உணவகம் வழங்கிய உணவில் புழு காணப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நீதிமன்றில் முன்னிலையாகவிருந்த நிலையில் நேற்று பிற்பகல் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டாமென கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மணி வண்ணன் பேரில் நீதவான் இக்கட்டளையை வழங்கினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டது. குறித்த உணவுகளை வழங்கிய அப்பகுதி உணவகத்திற்கு எதிராக வழக்கு தொடரப் பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது சம்பவம் தொடர்பான தண்டனை இன்று வழங்கப்படும் என்றும் குறித்த உணவகத்தை மீண்டும் திறக்கவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அன்றைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, வடக்கு ஆளுநர் உணவகத்திற்குள் வந்து நடந்த கொண்ட விடயம் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
இதன்படி வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகுமாறு வடக்கு ஆளுநருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதேவேளை வழக்கில் ஆளுநர் சுரேன் ராகவனை மன்றில் முன்னிலையாவதைத் தவிர்த்துக் கொள்வதற்கு பல்வேறு முனைப்புக்களும், பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளருக்கு, உளவியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆளுநர் நீதிமன்றில் முன்னிலையாகாமல் குறித்த கட்டளையை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவிடம் உணவக உரிமையாளர் கோரிய போதிலும், சட்டத்தரணி அதனை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து புதிய சட்டத்தரணி ஒருவரின் மூலம் ஆளுநர் நீதிமன்றம் வருவதை தடுக்க முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவுசெய்யப்பட்டு, நீதவானிடம் கட்டளையும் பெற்றதாக கூறப்படுகின்றது.
இப்படியான நிலையில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்தால், அது அவருடைய அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டிருக்கும் எனும் நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன்.
பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கை வாபஸ் பெற்று, வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை காப்பாற்ற எந்த ஒரு சட்டத்தரணியும் முன்வராத நிலையில், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் இச் செயற்பாடு வடக்கு ஆளுநரிற்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக ஆளுநரின் உதவியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னணியின் தலைவர் கயேந்திரகுமாருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுடன் நல்ல உறவு காணப்படுவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு காணப்படுகின்றது என்பதும் ஆளுனர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நியமனத்தில் வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு ஆளுனரை காப்பாற்றிய முன்னணியின் சட்டத்தரணி மணிவண்ணன்…! வடக்கு ஆளுனரை காப்பாற்றிய முன்னணியின் சட்டத்தரணி மணிவண்ணன்…! Reviewed by NEWS on April 09, 2019 Rating: 5