கல்முனை அதிரடி முடிவு : தக்பீர் முழக்கத்துடன் பையத் செய்யப்பட்டது!

ஒன்றினைவோம் ஒழுக்கமுள்ள போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்"எனும் தொனிப்பொருளில் கல்முனை பிரதேசத்தில் ,போதைபொருள் ஒழிப்பு தொடர்பாக் (06) இன்று சனிக்கிழமை விழிப்புணர்பு மாநாடொன்று கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 வரை நடைபெற்றது.

கல்முனையில் புகைத்தல் போதைப் பொருள் பாவனைகளை ஒழிக்கும் நோக்கில் , கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் , உலமாக்கள் , புகைத்தல் போதைப் பொருள் ஒழிப்பு செயலணியினர் ஒன்று சேர்ந்து தீர்மானித்து , இன்றைய (06) தினம் ஒன்று கூடியுள்ள ஊர் மக்கள் முன்னிலையில் உடன் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் வகையில் பிரகடனங்கள் . மேற்க்கோள்ளப்பட்டது

அதில் உடன் நடைமுறைக்கு வரும் பிரகடனங்கள் .

01 . கல்முனை பிரதேசத்தில் புகைத்தல் போதைப் பொருட்களை பாலித்தல் , அவற்றை விற்பனை செய்தல் , விநியோகித்தல் , கொண்டு செல்லுதல் , பாதுகாத்தல் , சேமித்து . வைத்தல் ஆகிய அனைத்தும் இன்று முதல் முற்றாகத் தடை செய்யப்படுகின்றன . 


02 . கல்முனைப் பிரதேசத்தில் வாழும் ஒரு நபர் மேற்படி குற்றங்களில் ஈடுபடும் போது புகைத்தல் போதைப் பொருள் ஒழிப்பு செயலணியினால் அமைக்கப்படும் விசாரணை - சபையின் முறையான விசாரணை ஒன்றின் முடிவில் நிருபிக்கப்படின் , இஸ்லாமிய ஷரீஆவிற்கமையவும் இலங்கை சனநாயகக் குடியரசின் நீதித்துறைச் சட்டதிட்டங்களை அனுசரித்தும் குறித்த நபருக்கு சீர்திருத்தக் ( தஃஸீர் ) தண்டனைகள் நிறைவேற்றப்படும் . 


. 03 . குறித்த குற்றச் செயல் தொடர்பான சாட்சியங்களை மறைத்தல் , விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தல் , இதுவிடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு உதவுதல் . ஊர் கட்டுப்பாட்டினை மீறுதல் ஆகிய அனைத்தும் தடுக்கப்படுகின்றன . இவற்றில் ஈடுபடும் எவராக இருப்பினும் புகைத்தல் போதைப் பொருள் பாவனைவிடயத்தில் விசாரிக்கப்பட்டு உரிய வழிமுறையினூடாக தண்டனைகள் நிறைவேற்றப்படும் 

04 , மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸ் திணைக்களம் , நீதிமன்றம் , மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற விசாரணை சபைகள் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் இச் செயலணி பூரண ஒத்துழைப்பை வழங்கும் .

05 . புகைத்தல் , போதைப் பொருள் ஒழிப்பு செயலணியின் செயற்பாடுகளும் கண்காணிப்புகளும் தொடச்சியாக நடைபெறும் , •

எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் பிரகடனங்கள் . 

மேற்படி கட்டுப்பாடுகளை மீறி புகைத்தல் போதைப் பொருள் விடயத்தில் தொடர்ந்தும் ஈடுபடுவர்கள் அல்லது இது விடயமாக நீதிமன்றத்தினால் தண்டணை வழங்கப்பட்டவர் புகைத்தல் போதைப் பொருள் செயலணியின் விசாரணை சபையிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டடு தௌபாச் செய்ய மறுத்தால் கீழ் குறிப்பிடப்படும் தண்டனைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகும்.


01 . அவர்களின் பெயர்களை பள்ளிவாசல்களின் விளம்பரப் பலகையில் காட்சிப்படுத்தி , ஊர்க்கட்டுப்பாட்டை மீறியவர் என இனங் காட்டுதல் . 


02 . குறித்த நபரின் திருமணம் , மரணம் முதலான நன்மை தீமைகளில் பள்ளிவாசலின் . பங்களிப்புகளை விலக்கிக் கொள்ளுதல் 


03 . குறித்த நபர் ஊரிலிருந்து முற்று முழுதாக தனிமைப்படுத்தப்படுவார் .

04 . குறித்த நபரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு மையவாடியில் தனியான இடம் ஒதுக்கப்படும் . 


என்றும் பிரகனம் எடுக்கப்பட்டது பின்னர் தக்பீர் முழக்கத்துடன் பையத் மேற்க்கொள்ளப்பட்டது .


இஸ்லாமிய சமய விழுமியங்களை பின்பற்றிவரும் தனித்துவம் கொண்ட எமது கல்முனையின் குடிமகனாகிய நான் , புகைத்தல் , போதைப் பொருற்களைப் பாவிக்க மாட்டேன் என்றும் , விற்பனை செய்தல் , விநியோகித்தல் , கொண்டு செல்லுதல் , பாதுகாத்தல் , சேமித்து வைத்தல் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வேன் என்றும் , ஏற்கனவே அதற்கு அடிமையாகியுள்ள அல்லது அடிமையாகாத எனது உறவினர்களையும் , நண்பர்களையும் ! புகைத்தல் , போதைப் பொருட்களின் பாவனையிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் , எனது ஊரையும் முழு இலங்கையையும் போதைப் பொருளிலிருந்து மீட்டுக் கொள்வதற்காக இன்று என்னிடம் ஒப்படைக்கப்படும் மகத்தான கூட்டுப் பொறுப்பை உயர்ந்தபட்ச அர்ப்பணிப்போடும் , நேர்மையோடும் இறைவனுக்கா நிறைவேற்றுவேன் என்றும் உறுதிபூண்டு மகத்துவமிக்க இறையில்லத்திலிருந்து இறைவனை நினைத்து சத்தியம் செய்கின்றேன் சத்தியம் செய்கின்றேன் .என அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியில் சத்திய பிரமாணம் மேற்க்கொண்டனர் .


மேலும் இவ் போதையொழிப்பு மாநாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக கல்முனை வர்த்தக சமூகத்தினர் தங்கள் வியாபாரம் நிலையங்களை மூடி தங்களது ஆதரவினை வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில் பிரதமஅதிதியாக மன்னார் உயர் நீதிமன்ற நீதிபதி ,அல்ஹாஜ் . என்.எம்.அப்துல்லாஹ் கலந்து கொண்டார் .
கல்முனை அதிரடி முடிவு : தக்பீர் முழக்கத்துடன் பையத் செய்யப்பட்டது! கல்முனை அதிரடி முடிவு : தக்பீர் முழக்கத்துடன் பையத் செய்யப்பட்டது! Reviewed by Ceylon Muslim on April 06, 2019 Rating: 5