நொச்சியாகம வர்த்தகர் வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

நொச்சியாகம பிரதேசத்தில் ( அனுராதபுர மாவட்டம்) பிரபல வியாபாரியொருவரின் வீடொன்றிலிருந்து வெடிப்பொருள்கள் தொகையொன்று நொச்சியாகம பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) காலை 9.30 நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நொச்சியாகம எரிபொருள் நிலையத்தின் முன்னால் அமைந்துள்ள இரு மாடி வீட்டுக்குச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே, வெடிப்பொருள்கள் பெருமளவிலான தொகையுடன் சந்தேகநபர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு ஜெலான்ட்டின் குச்சிகள் 1000அமோனியா 500 கிலோ மற்றும் வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்படும் வயர்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

வீட்டில் இருந்த ஆறு பேருடன் அங்கு வேனில் வந்த 2 பேரும் சேர்த்து கைதாகி உள்ளனர். குறிப்பிட்ட வீட்டு உரிமையாளர் முன்னரும் வெடிபொருட்கள் வைத்திருந்த விவாகரத்தில் கைதாகி விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

Source: MadaNews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...