அறுவைக்காட்டு விடயத்தில் ஹக்கீமின் மெளனிப்பும், நாடாளுமன்ற நகைப்பு உரையும்!

புத்தளம், அறுவைக்காட்டு பகுதியில் தென்னிலங்கையின் குப்பைகளை கொட்டும் திட்டத்தினால் புத்தளம் பகுதி மக்களுக்கு பாதிப்புள்ளது. இதை தடுத்து நிறுத்துமாறு புத்தளம் மக்கள் கடந்த 200 நாட்களுக்கு மேலாக போராட்டங்களை தங்களது ஊர்களிலும், கொழும்பிலும் மேற்கொண்டுவந்ததை நாம் அனைவரும் அறிந்தோம்.

குறித்த அறுவைக்காட்டு திட்டமானது அமைச்சர் சம்பிக்க சரணவக்கவினால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். அவரினால் இத்திட்டம் நிறுத்த முடியாது எனக்கூறியவாறு கடந்த காலங்களில் பேச்சுக்கள் வீசியதை அனைத்து அரசியல்வாதிகளும் அறிந்ததே. அதனையும் தாண்டி இந்த போராட்டத்தில் பல அரசியல்வாதிகள் கைகோர்த்தும் மக்களுக்கு ஆதரவாக தங்களை எதிர்ப்புக்களையும் மக்கள் மத்தியிலும், அரசியல் தளங்களிலும் மேற்கொண்டு வந்ததை அவதானிக்ககூடியதாகவுள்ளது. 

ஆனால் இது தொடர்பில் புத்தளம் நகரசபையின் ஆட்சியை தன் வசம் வைத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கிம் அவர்களின் நிலைப்பாடு தொடர்பில் நாம் அவதானம் செலுத்தினால் மிக குறைந்த செயற்பாடுகளையே நாம் பார்க்க கிடைத்தது. 

குறித்த அறுவைக்காட்டு திட்டத்தை எதிர்த்த மக்கள் பல இன்னல்களு மத்தியில் சண்டை போட்டும், கைது செய்யப்பட்டும்  இந்த எதிர்ப்பு போராட்டம் வீரியமடைந்து காணப்பட்டது ஆனால் இவைகளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பாக நகரசபையை தன் வசப்படுத்தியுள்ள அமைச்சர் மேற்கொண்டுள்ள மக்கள் சார்பான விடயங்களை அவதானித்தால் அவை அனைத்தும் பூச்சியமே! 

போராட்டங்களில் பங்குகொண்ட மக்களை 2018.10.05 அன்று சந்தித்து புகைப்படம் எடுத்துச்சென்ற ரவூப் ஹக்கீம் இந்த மக்களுக்காக  அதன் பின் செய்த நடவடிக்கை என்ன..? என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பாருங்கள். அல்லது ரவூப் ஹக்கீம் அமைச்சர் அவர்களின் சகாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 

இதன் பின்னர் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டமானது கொழும்பு காலி முகத்திடலிலும், அலரி மாளிகைக்கு முன்னாளும் நடைபெற்றது இதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்புத்தான் என்ன? அல்லது அதன் பின்னராவது பிரதமரை அல்லது ஜானதிபதியை சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பை அமைச்சர் ஹக்கீம் ஏற்படுத்திக்கொடுத்தாரா? இல்லையே!

அதன் பின்னர் மார்ச் 12ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் முஸ்லிம் பிரதிநிதிகளை புத்தளம் மக்களின் முக்கியஸ்தர்கள் சந்தித்து பேச்சு நடாத்தினார்கள்.! அதன் பின்னராவது அமைச்சர் ரவூப் ஹக்கிம் செய்த விடயமென்ன? 

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை (05) பிரதமர் ரணில் விகரமசிங்க அவர்களை மாலை நாடாளுமன்றில் புத்தளம் முக்கியஸ்தர்களும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து பேச்சு நடாத்துவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேற்கொண்ட நடவடிகைகளை அறிந்த நீங்கள் அன்று காலை ”ஜனாதிபதி, பிரதமர் இது தொடர்பில் பேச நேரம் தர வேண்டும்....” என நாடாளுமன்றில் உரையாற்றியதன் நோக்கம் தான் என்ன? உங்களுக்கு தெரியாதா மாலை பிரதமருடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படுள்ளது என? தெரிந்தும் அவ்வாறு நீங்கள் நாடாளுமன்றில் பேசி வீடியோவை முகநூலில் போட்டு புத்தளம் மக்களுக்கு நடிக்க நினைத்தீர்களோ தெரியவில்லை? சரி பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்ட நீங்கள் உங்கள் வாயால் பேசியது என்ன? ஒரு வார்த்தையெனும் பேசினீர்களா? 

புத்தளம் விடயத்தில் நீங்கள் மற்றைய அமைச்சர்களை பகைத்து நடந்துகொள்ளக்கூடாது என நினைக்கின்றீர்களா? 

ஆனால், முழுமையாக இந்த புத்தளத்த திட்டத்தை எதிர்த்தன் காரணத்தினால் இன்று சிங்கள மக்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஒரு இனவாதியாக உங்கள் அரசாங்கத்தில் உள்ளவர்களால் சித்தரிக்கப்பட்டதையும், நாளுக்கு நாள் வீதிகளில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொடும்பாவிகளும் எறிக்கப்பட்டதை காணமுடியவில்லையா? அதை பார்த்து நீங்களும் உங்கள் பாசறையில் வளர்ந்த சில போராளிகள் சொல்லுவது போல் “தேர்தல் படம்” என சொல்லுகின்றீர்களா? 

நீங்கள் புத்தளம் மக்கள் விடயத்தை கணக்கில் எடுத்ததாகவே தெரியவில்லை, அது ஒரு சமூகத்தின் இருப்பிடத்திற்கான உரிமை போராட்டம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அமைச்சர் ரிசாத் பதியுதீன் போல் ஏன் உங்களால் செயற்பட முடியவில்லை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் புத்தளம் விடயம் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை புத்தளம் மக்கள் நாளுக்கு நாள் நன்றியுணர்வுடன் சொல்ல உங்களால் ஏன் இது தொடர்பாக பேச முடியவில்லை..! அமைச்சரவைக்கு அஞ்சிக்கொண்டிருக்கின்றீர்களா? அல்லது அமைச்சர் சம்பிக்கவுக்கு பயமா அல்லது பிரதமர் பதவியை பறித்துவிடுவார் என அஞ்சிக்கொண்டீர்களா? மறந்து விடாதீர்கள் அல்லாஹ் மிகப்பெரியவன் பார்த்துக்கொண்டிருக்கின்றான்! 

அமைச்சரவையில் உங்களால் பேச முடியாதா? நாடாளுமன்றில் பேச்சு வார்த்தைகளுக்கு முன் உரையாற்ற முடியாதா? அல்லது ஜனாதிபதி பிரதமருடன் பேசுவதற்காக நேரமில்லை அல்லது பேச்சு வார்த்தைக்கு நேரம் ஒதுக்கியாவது கொடுக்க முடியாதா? 

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் உங்களைப்போல் பயந்திருந்தால் இன்று புத்தளம் மக்களின் போராட்டத்திற்கு அர்த்தமில்லாமல் இருந்திருக்கும், ஆக இனியாவது பிரதமர் பச்சைக்கொடி காட்டியது போல் உள்ளது முடிந்தால் மக்களின் இரிப்பிடத்திற்காக உதவுங்கள்... வாய்மூடி மெளனியாக இருக்காதீர்கள்...!! 

உங்கள் மீது நாங்கள் அதிகம் பற்று வைத்து உங்களுக்காக உங்களின் தலைமைத்துவம் சரியென்றே எனது சிறு வயது வாக்குகளை உங்களுக்காக அம்பாறை மாவட்டத்தில் அழித்து ஏமாற்றப்பட்டோம்... 
அறுவைக்காட்டு விடயத்தில் ஹக்கீமின் மெளனிப்பும், நாடாளுமன்ற நகைப்பு உரையும்! அறுவைக்காட்டு விடயத்தில் ஹக்கீமின் மெளனிப்பும், நாடாளுமன்ற நகைப்பு உரையும்! Reviewed by Ceylon Muslim on April 06, 2019 Rating: 5