பையத்து செய்த போது பெண்ணொருவரும் இருந்தார்...

ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் இணையத்தில் வௌியிடப்பட்டிருந்த காணொளியில் பெண்ணொருவரும் உள்ளதாக கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வௌியிட்டுள்ளது.

குறித்த காணொளியில் ஆண்களுக்கு பின்னால் குறித்த பெண் உள்ளதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

காணொளியின் இறுதியில் தற்கொலை குண்டுதாரிகள் ஒவ்வொருவரும் ஒருவரின் கை மீது கை வைத்து உறுதிமொழி வழங்கிய போது குறித்த பெண்ணின் கையை அங்கு தௌிவாக காணக்கூடியதாய் உள்ளது என அந்த பத்திரிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையினுள் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குறித்த பயங்கரவாதிகள் பொருளாதார ரீதியில் உயர் அல்லது நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் , அவர்கள் உயர் கல்வியறிவினை பெற்றவர்கள் எனவும் கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பையத்து செய்த போது பெண்ணொருவரும் இருந்தார்... பையத்து செய்த போது பெண்ணொருவரும் இருந்தார்... Reviewed by Ceylon Muslim on April 25, 2019 Rating: 5