ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக வைத்தியர்களின் போராட்டம் தொடர்கிறது..ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளை திட்டி அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது.

முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மன்னிப்பு கேட்காவிட்டால் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் செய்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

பணிப்புறக்கனிப்பு காரணமாக ஊவா மாகாண அனைத்து வைத்தியசாலைகளும் வழமையான பணிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த வேலை நிறுத்தத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஊவா மாகாண மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டவை இணைந்து கொண்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...