தேசிய காங்கிரஸ் கட்சிக்குள்ள ஒருவரை சுடுவதற்கு திட்டம்? அதாவுல்லாஹ் மெளனி..

(எம்.ஜே.எம்.சஜீத்)

தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரனி பஹீஜை கிழக்கு வாசலில் வைத்து சுடுவேன் என்று கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர் ஒருவர் கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கிழக்கு வாசலில் தெரிவித்த கருத்திற்கு நான் கட்சியின் தலைவரிடம் ஆட்சேபனை தெரிவித்த போது வாய்மூடி மௌனமாக இருந்தவர்கள் இன்று கட்சிக்கு பெரும் தியாகம் செய்துவிட்டு கொள்கை ரீதியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளில் கட்சியில் இருந்து விலகியவர்கள் பற்றி விமர்சிக்க் ஆரம்பித்துள்ளார்கள் என இறக்காமப் பிரதேசத்தின் கல்விமான்கள், முக்கியஸ்தர்கள், தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முக்கியஸ்தர்களின் ஒன்று கூடல் தேசிய காங்கிரஸின் இறக்காம முன்னாள் அமைப்பாளர் பரீட் தலைமையில் இறக்காமம் மூன் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அரசியல் கட்சிகளின் பயணங்கள் எப்போதும் கட்சியின் தலைமையின் விசுவாசத்தில்தான் தங்கி உள்ளது. அந்த வகையில் எங்களின் அரசியல் பயணங்களில் மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் ஆகியோர்களின் அரசியல் பயணங்களுக்கு உச்ச விசுவாசமாக இருந்து எங்களின் விசுவாசத்தினை அக்கட்சியின் வளர்ச்சிக்கு அர்பணிப்பு செய்துள்ளோம். தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா அன்று முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேறிய போது பதவிக்காக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபுடன் திரிந்தவர்கள் யார் என்பதனை நமது முஸ்லிம் சமூகம் நன்கு அறியும் அரசியல் அதிகாரத்தின் ஊடாக வழங்கப்பட்ட பதவிகளைப் பாவித்து நமது சமூகத்திற்காக இதுவரை என்ன நன்மைகளை பெற்று கொடுத்துள்ளார்கள் என்பதனை நமது சமூகம் நன்கு அறியும்.

ஏனைய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தங்களின் கட்சியில் இருந்து விலகி கட்சிக்குள் நடந்தவைகளை மக்கள் மத்தியில் தெரிவிப்பது போல் நாங்கள் இல்லை என்பதனை தெளிவாக தெரிவித்து விட்டு எமது பிரமுகர்களை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கின்றோம.; 
அட்டாளைச்சேனை மீலாத்நகருக்கு வந்து கட்சியின் தலைவர் கட்சிக்காக பெரும் தியாகங்கள் புரிந்தவர்கள் கூட்டாக கட்சியில் இருந்து வெளியேறிய வேதனையால் கட்சியின் வளர்;ச்சிப்பாதையில் எங்களிள் தியாகங்கள் எப்படி அமைந்தது என்று நன்கு தெரிந்தும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பதறுகள் போன்று என்று மனவேதனையில் தெரிவித்துள்ளார். தலைவரின் வேதனையான கருத்து குறித்து இதுவரையும் நாம் மௌனமாக இருந்து வந்துள்ளோம். இது நாங்கள் தலைமைக்கு கொடுக்கும் மரியாதை என்பதனை எல்லோரும் விளங்கி கொள்ள வேண்டும். தலைவருக்க கொடுக்கும் மரியாதை ஏனையவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து தவறாக விமர்சனங்களை தெரிவிக்கின்றவர்கள் அவைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். நாங்கள் எங்களின் அரசியல் பயணத்தில் பயனிக்கின்றோம் நீங்கள் உங்களின் அரசியல் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

அரசியல் நடவடிக்கைகளின் போது பதவி, பணத்திற்காக சோரம் போவது என்றால் எப்போதோ நாங்கள் போயிருக்கலாம். தேசிய காங்கிரஸின் உருவாக்கத்திற்க்கும் உச்ச வளர்ச்சிக்கும் சார்பாக இருந்து செயல்பட்டுள்ளோம். தேசிய காங்கிரஸினால் வழங்கப்பட்ட பதவிகள் ஊடாக முழு கிழக்கு மாகாணத்திலும்; எங்களால் முடிந்தளவு பணி புரிந்துள்ளோம்.

கட்சியின் உச்ச அதிகாரத்தில் இருந்த போதும், கட்சி உச்ச வீழ்ச்சியில் இருந்த போதும் கொள்கையுடன் செயல்பட்டு கட்சியின் மீள்வளர்ச்சிக்கு முடிந்தளவு பங்களிப்பு செய்து விட்டுத்தான் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளோம் என்ற வரலாற்றை மறந்து சிலர் பேசுவதனை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நாங்கள் கட்சிக்கும். தலைமைக்கும் இது வரைக்கும் உச்சமான விசுவாசமாக இயங்கி விட்டு கொள்கை ரீதியில் எங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளினால் கட்சிக்கு வெளிப்படையாகவே தெரிவித்து விட்டு கட்சியை விட்டு வெளியேறியுள்ளோம். 
கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைந்து எங்களோடு அரசியல் பயணங்களை மேற் கொள்வதற்கு விரும்பியவர்கள் மட்டும் இணைந்து கொள்ளலாம். நாங்கள் எங்களின் அரசியல் எதிர்கால பயணம் குறித்து இன்னும் தீர்மாணங்கள் மேற்கொள்ளவில்லை.

விரைவில் எல்லோரும் இணைந்து அம்பாறை மாவட்ட பிரதேசங்களுக்குச் சென்று மக்களின் கருத்துகளை கேட்டறிந்து இறுதியில் தீர்மாணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். நாம் எப்போதும் சமூகத்தின் குரலாக இருந்து செயற்பட்டு வருவதுடன் நமது நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களின் உணர்வுகளுக்கு;ம மதிப்பளித்து வருகின்றோம் என்பதனை எமது கடந்த கால அரசியல் நடவடிக்கைகளில் இருந்து நம்மவர்கள் அறிந்து கொள்வார்கள்.

நாங்கள் வாக்குகளை எதிர்பார்த்து அரசியல் செயற்பாடுகளை முன் எடுப்பவர்கள் அல்ல நமது செயற்பாடுகளில் இனவாதம் களக்காமல் இருக்க வேண்டும் அப்போதுதான் ஏனையவர்கள் இனவாதமாக செயற்படும் போதும் நாம் நிமிர்ந்து நின்று இனவாத செயற்பாடுகளை நிற்பாட்டுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதனை நமது சமூகத்தினர் மனதில் வைத்து செயற்பட வேண்டும்.

எங்களால் முடிந்தளவு இறக்காம பிரதேச மக்களுக்கு உதவிகளை புரிந்ததுடன் உங்களுக்கு ஆபத்துகள் ஏற்பட்ட போதெல்லாம் உங்களின் தைரியமான குரலாக செயற்பட்டு இப்பிரதேச மக்களின் உண்மையான உணர்வுகளை தைரியமாக நமக்கு எதிரான இனவாதிகளுக்கு நேருக்கு நேர் எத்தி வைக்க எனக்கும் இறைவன் வாய்பளித்துள்ளான். இது குறித்து நான் இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன் எனத் தெரிவித்தார் இதன்போது இறக்காம பிரதேசத்திற்கான விஷேட நடவடிக்கைக் குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய காங்கிரஸ் கட்சிக்குள்ள ஒருவரை சுடுவதற்கு திட்டம்? அதாவுல்லாஹ் மெளனி.. தேசிய காங்கிரஸ் கட்சிக்குள்ள ஒருவரை சுடுவதற்கு திட்டம்? அதாவுல்லாஹ் மெளனி.. Reviewed by Ceylon Muslim on April 05, 2019 Rating: 5