2 மொழிகள் போதும், அரபு கிழக்குக்கு தேவையில்லை : ரவி கருணாநாயக்க

எமது நாட்டுக்கு இரண்டு மொழிகள் போதும் என்றும், கிழக்கு மாகாணத்துக்கு அரபு மொழி அவசியமில்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க, இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், இது தொடர்பில் கதைப்பதற்கு எமக்கு முதுகெழும்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்பே​தைய நிலையில், நாட்டிலுள்ள சகலரும் இனவாத நோக்கத்துடன் இல்லாமல் செயற்பட வேண்டும். நாட்டின் இன்றைய நிலைமைக்கு அனைவரும் பொறுப்பாளர்கள் என்றும், இந்த சந்தர்ப்பத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதை தவிர்த்து சரியான பாதையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.


2 மொழிகள் போதும், அரபு கிழக்குக்கு தேவையில்லை : ரவி கருணாநாயக்க 2 மொழிகள் போதும், அரபு கிழக்குக்கு தேவையில்லை : ரவி கருணாநாயக்க Reviewed by Ceylon Muslim on May 06, 2019 Rating: 5