தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

May 9, 2019

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறும்...!ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்று முடிந்துள்ளது. 

இன்று காலை 10.00 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவடைந்ததாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும் இதன் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக கூறியுள்ளார். 

இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர். 

இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ள நிலையில் இன்று நான்காவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages