மாத்தளையில், பெண்களின் தராவீஹ் தொழுகை சர்ச்சையால் மோதல்மாத்தளை – வரகாமுர பகுதியில் இரண்டு முஸ்லிம் குழுவினர் இடையே நேற்று இரவு ஏற்பட்ட தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது.

வரகாமுர பிரதேசத்தில் அமைந்துள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னாலேயே குறித்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறையுடன் தொடர்புடைய 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த அமைப்பின் தலைவனான சஹ்ரானின் தலைமையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதலையடுத்து நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், முஸ்லிம் மத தலைவர்களின் அறிவுத்தலுகமைய முஸ்லிம் பெண்களுக்கான தொழுகைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இருப்பினும் ஜமாத் அமைப்பினர் மீண்டும் பெண்களுக்கான தொழுகையை ஏற்பாடு செய்த வேளையே அந்த பகுதி முஸ்லிம் மக்கள் அந்த அமைப்பினருடன் முரண்பட்டுள்ளனர். இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் பின்னர் வன்முறையாக வெடித்துள்ளது.

அதனையடுத்த பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தி அப்புறப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். மேலும் குறித்த பகுதியில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

தற்போது அங்கு அமைதியான சூழ்நிலை நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.
மாத்தளையில், பெண்களின் தராவீஹ் தொழுகை சர்ச்சையால் மோதல் மாத்தளையில், பெண்களின் தராவீஹ் தொழுகை சர்ச்சையால் மோதல் Reviewed by NEWS on May 08, 2019 Rating: 5