நேற்றைய கலவரத்தில் பலியான பௌசுல் அமீர்தீன் அவர்களின் ஜனாஸாவில் அமைச்சர் ரிஷாத் பங்கேற்பு ..!
புத்தளம் மாவட்டம் கொட்டரமுல்ல தாக்குதலில் இன்று இரவு  உயிரிழந்த அல்அக்ஸா மாவத்தை முதலாவது வீதியில் வசிக்கும் பௌசுல் அமீர்டீனின் ஜனாசா வீட்டுக்கு இன்றைய (14)தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

தங்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.

இதில் காடையர்களினால் தாக்குதலுக்கு உள்ளான குடும்பங்களை சந்தித்து ஆறுதலும் கூறினார் அமைச்சர் றிசாத் பதியுதீன். இதில் அப்பகுதியை சேர்ந்த பௌத்த மதகுரு மற்றும் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நேற்றைய கலவரத்தில் பலியான பௌசுல் அமீர்தீன் அவர்களின் ஜனாஸாவில் அமைச்சர் ரிஷாத் பங்கேற்பு ..! நேற்றைய கலவரத்தில் பலியான பௌசுல் அமீர்தீன் அவர்களின் ஜனாஸாவில் அமைச்சர் ரிஷாத் பங்கேற்பு ..! Reviewed by NEWS on May 14, 2019 Rating: 5