அட்டாளைச்சேனை முழுவதும் தேடுதல் வேட்டை...!அம்பாறை-அட்டாளைச்சேனை உட்பட பரவலாக அனைத்து பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டு ஒவ்வொரு வீடு வீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவமும் பொலிஸாரும் இணைந்து அட்டாளைச்சேனை 6 ,7 ,8 ஆம் வட்டாரங்களில் இன்று காலை 5 மணி முதல் தற்போது வரை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் வீடுகளில் வசிப்பவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதோடு, அடையாள அட்டைகளும் பதிவு செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை காத்தான்குடியை சேர்ந்த மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுதாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் பதியத்தலாவ ,ரஹ்மானியா ஜும்மாப் பள்ளியின் மௌலவி எனவும், இவரை மகாஓயாவில் வைத்து கைது செய்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தெரியவருகையில்,

இவரின் கையடக்க தொலைபேசியில் சஹ்ரானின் உரைகள் இருந்ததாக தெரிவித்தே விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...