பயங்கரவாதிகள் கைது செய்யப்படும் வரை பாதுகாப்பு தளர்த்தப்படாது - ரணில்நாடு முழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை, எந்த வகையிலும் தளர்த்த வேண்டாமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்தியுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படும் வரை, பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டாம் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பின்னரான நிகழ்வுகள் குறித்து, பாதுகாப்புப் படையினரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அனைவரையும் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பெற்ற பின்னரே, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய எல்லா நபர்களும் கைது செய்யப்படும் வரை, பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் கைது செய்யப்படும் வரை பாதுகாப்பு தளர்த்தப்படாது - ரணில் பயங்கரவாதிகள் கைது செய்யப்படும் வரை பாதுகாப்பு தளர்த்தப்படாது - ரணில் Reviewed by Ceylon Muslim on May 04, 2019 Rating: 5