வாள்கள் சம்மந்தமாக சட்டம் என்ன சொல்கிறது...?


அவசர காலச் சட்டத்தின் அனுசரணையோடு முஸ்லீம்களின் வீடுகளில் திடீர் திடீரென்று நடக்கின்ற முப்படைகளின் ரவுன்ட் அப்புகள், பொலிஸ் பரிசோதனைகள் என்ற செய்திகளோடு சக்தி ஹிரு போன்ற நச்சு ஊடகங்களில் அடிக்கடி காணுகின்ற பிரேக்கிங் பித்தலாட்டங்களில் “வாள்” வைத்திருந்த மேட்டர் கண்ட மேனிக்கு நாட்டில் பொது சனங்களை தடாலடி செய்து கொண்டிருக்கின்றது.

வாள் வைத்திருந்தார் வாள்கள் வைத்திருந்தார் பள்ளிகளில் வாள்களென்று பல நிவ்ஸ் ஐட்டங்கள் ஒவ்வொரு நாளும் ஈரற்குலை தண்ணீரை உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தன. வாள்கள் கத்திகள் தொடர்பில் கத்திகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் (Dangerous Knives Ordinance Or Knives Ordinance) கையாளப்படுகின்றது.

இந்த சட்டத்தின் பிரிவு-16 “தடை செய்யப்பட்ட கத்திகள் (Prohobited Knives) ” எவை என்று ஏற்பாடு செய்கின்றது. அதன் படி

“இரண்டு இஞ்சுக்கு கூடிய நீளமுடையதும், நீதிமன்றத்தின் பார்வையில் குத்தக் கூடிய உபகரணமாக பயன்படுத்த முடியாத அளவுக்கு முனையானது மொட்டையாக இல்லாமல் அல்லது வட்ட வடிலிலில்லாததும், கூரிய முனையுள்ள கத்தி அல்லது பிளேட் (Clasp Knife or blade)” கத்தி எனக் கொள்ளப்படும். இந்தக் கத்தி என்பது வாள் (sword), கூரிய முனை கொண்டதும், கூரான இரு பக்க விளிம்படையதுமான கத்திகள் (dagger), குத்துவதற்காக பயன்படுத்துகின்ற வேறேதேனும் இதையொத்த ஆயுதங்கள் அனைத்தும் கத்தி என்ற பதத்துக்குள்ளே அடங்கும்.

பிரிவு-2ன் படி” யாரேனும் ஒருவர் தடை செய்ய்ப்பட்ட கத்தியை வைத்திருக்கின்றாரோ அல்லது கொண்டு செல்லுகின்றாரோ அல்லது அணிந்திருக்கின்றாரோ அவர் அந்நதக் குற்ற்த்துக்கு குற்றவாளியாகக் காணப்பட்டு ஒரு மாதத்துக்கு மேற்படாத சிறைத்தண்டணை அல்லது ஐம்பது ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணம் விதிக்கப்படும். இரண்டாவது தடவையாக இவ்வாறான குற்ற்த்துக்கு ஆளாகின்ற ஒரு நபர் மூன்று மாதத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது நூறு ரூபாவுக்கு மேற்படாத தண்டப் பணம் விதிக்கப்படும் குறித்த தடை செய்யப்பட்ட கத்தி அரச உடமையாக்கப்படும்.

பிரிவு-04ன் படி “இவ்வாறு தடை செய்யப்பட்ட கத்திகளானவை ஏதேனும் சட்ட ரீதியான வியாபாரம், கைப்பணி போன்வற்றுக்கு தவிரக்க முடியாத காரணத்தினால் குறித்த நபரால் அந்த சட்ட ரீதியான தொழிலுக்கு அல்லது கைப்பணி போன்றவற்றுக்காக அவற்றினை வைத்திருத்தல் கொண்டு செல்லல் என்பன குற்றமாகாது.

பிரிவு-08 ன் படி “இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்ப்டுகின்ற ஒருவருக்கு 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியில் நடபடிக்கோவையின் பிரவு-306 தொடக்கம் 309 வரையிலான பிரிவுகள் ஏற்புடையதாகாது.

பிரிவு-05 “ஆயுதப்படை மற்றும்; பொலிஸில் சேவை புரிகின்ற யாரேனும் இந்த சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கத்திகளை கொண்டிருப்பது அணிந்திருப்பது போன்வற்றுக்கு இந்த சட்டம் ஏற்புடைத்தாகாது.”

பிரிவு-04 மற்றும் பிரிவு-05ல் சொல்லப்பட்டவர்கள் தவிர வேறு யாரேனும் தடை செய்யப்பட்ட கத்திகளை வைத்திருத்தல் கொண்டு செல்லல் அல்லது அணிந்திருத்தல் இந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். ,
வாள்கள் சம்மந்தமாக சட்டம் என்ன சொல்கிறது...? வாள்கள் சம்மந்தமாக சட்டம் என்ன சொல்கிறது...? Reviewed by NEWS on May 13, 2019 Rating: 5