கொச்சிக்கடை தற்கொலையாளியின் சகோதரர்கள் கைது...!கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் சகோதரர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை இடம்பெற்றபோதே குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு அன்று தற்கொலை குண்டுதாரி நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...