முஸ்லிம் சமூகம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது, மெல்கம் ரஞ்சித் ஆண்டகை..!


கத்தோலிக்க ஆயர்மாரின் தீர்மானித்திற்கு அமைய, எதிர்காலத்தில் மறை மாவட்டங்கள் தோறும் ஆராதனைகள் நடத்தப்படவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது காலி மறைமாவட்ட ஆராதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராயர் குறிப்பிட்டார். 

மேலும், கத்தோலிக்க ஆயர்மார் மாநாட்டு அமைப்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் கல்வி நடவடிக்கைகளுக்காக கத்தோலிக்க பாடசாலைகளை எதிர்வரும் 14ம் திகதி திறப்பது பற்றி பரிசீலித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு முஸ்லிம் சமூகம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது. அத்தோடு, குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது, மெல்கம் ரஞ்சித் ஆண்டகை..! முஸ்லிம் சமூகம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது, மெல்கம் ரஞ்சித் ஆண்டகை..! Reviewed by NEWS on May 10, 2019 Rating: 5