தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

May 23, 2019

எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது..!பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது என அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் தவறவிடப்பட்ட கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடவை தவணைப் பரீட்சைகள் நடாத்தப்படுமா என பலர் வினவுவதாக சுட்டிக்காட்டியுள்ள M.M. ரத்னாயக்க, தவணைப் பரீட்சைகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை வழமைபோன்று இடம்பெறும் எனக் கூறியுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages