கோத்தாவுக்கு, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை

நபர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகத நிலையில் அவர் சாட்சியமளிப்பதற்கு வேறு ஒரு தினம் வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளனார்.

நாட்டில் காணப்படுகின்ற பாதுகாப்பு நிலையை கருத்திற் கொண்டு சாட்சியமளிப்பதற்கு இன்று நீதிமன்றில் ஆஜராக முடியாதுள்ளதாகவும், வேறு ஒரு தினம் வழங்குமாறும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...