ஒசாமா பின்லேடனின் உருவப் படத்துடன் கூடிய புத்தகமொன்றை வைத்திருந்தவர் கைது..!கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் சந்தேகத்தின் பெயரில்  நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர், ஒசாமா பின்லேடனின் உருவப் படத்துடன் கூடிய  புத்தகமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்​தேகத்துக்கிடமான இறுவட்டுகள், MI  ரக சிம் அட்டைகள் இரண்டுடனான ​அலைபேசி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று இரவு 8.45 மணியளவில் கல்முனை பொலிஸ் விசேட படையணியால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒசாமா பின்லேடனின் உருவப் படத்துடன் கூடிய புத்தகமொன்றை வைத்திருந்தவர் கைது..! ஒசாமா பின்லேடனின் உருவப் படத்துடன் கூடிய  புத்தகமொன்றை வைத்திருந்தவர் கைது..! Reviewed by NEWS on May 22, 2019 Rating: 5