தமிழர்களின் கோவிலில் குண்டுகள் மீட்பு - சம்மாந்துறை

கோவில் வளாகத்தில் வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மற்றும் வயர்கள் காணப்படுவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (7) மாலை 5 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாக மலசல கூடத்திற்கு அருகே வெடிக்கும் நிலையில் காணப்பட்டுள்ளது.

இதன் போது கோவில் பராமரிப்பாளர் வழங்கிய தகவலுக்கு அமைய ஆலய பரிபாலன தலைவர் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு நாளை காலை சம்பவ இடத்திற்கு வருவதாக அறிவித்துள்ளது.


இதே வேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக்கோயில் வாழை தோட்டம் ஒன்றில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு ஒன்று, ரம்போ கோடாரி, மற்றும் வாள் ஒன்று பொலித்தீன் உறை ஒன்றில் இடப்பட்டு உரப்பை ஒன்றில் போடப்பட்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் கோவிலில் குண்டுகள் மீட்பு - சம்மாந்துறை தமிழர்களின் கோவிலில் குண்டுகள் மீட்பு - சம்மாந்துறை Reviewed by NEWS on May 08, 2019 Rating: 5