யாழ். பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட சில பகுதிகளில் சோதனை நடவடிக்கை..யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மாணவர் விடுதி இன்று (03) பாதுகாப்பு நிமிர்த்தம் சோதனை செய்யப்பட்டது. 

அதிகாலை 5 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்ந சோதனை நடவடிக்கையில் கவச வாகனம் மற்றும் பேருந்துகள் சகிதம் சுமார் 300 தொடக்கம் 450 வரையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்த கால போர் சூழலில் யாழ். பல்கலைக்கழகமானது பாதுகாப்பு தரப்பினரால் உன்னிப்பான கவனத்தில் இருந்த ஒரு வளாகமாகும். 

கடந்த 2009 ஆம் ஆண்டு வரையில் யாழ். பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் ஏதும் இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ள நிலையில் இராணுவும் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னம் இருந்த சூழல் நிலவியது. 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலினை தொடர்ந்து நடைமுறைப்புடுத்தபட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையின் நிமிர்த்தம் தற்போது யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் மீண்டும் இராணுவம் உள்நுழைக்கபட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சோதனை நடவடிக்கைகளின் நிமிர்த்தம் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் ஊழியர்கள் தமது கடமை நேரத்திற்கு சற்று முன்னதாக சமூகமளித்த நிலையில் ஒவ்வவொரு பீடங்களும் அதனுள் உள்ள விரிவுரைக் கூடங்களும் தனித்தனியாக சோதனை இடப்பட்டது. 

வளாகத்திற்குள் உள்நுழையும் ஊழியர்களின் பைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் ஊழியர்கள் வளாகத்திற்குள் உள்நுழைய அனுமதிக்கபட்டனர். 

நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் இருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோத்தர்கள் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். 

எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அடுத்த சில தினங்களில் பல்கலைக்கழக கற்றல் செயல்பாடுகள் ஆரம்பிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...