பிடிக்கப்பட்ட கடிதங்களில் தவறு இல்லை : என்னுடைய அமைச்சு கடிதமே

கொழும்பு மத்திய அஞ்சலகத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 600 கடிதங்களும் தனது அமைச்சின் கீழ் தயாரிக்கப்பட்டதென அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதம் இணையத்தள பக்கமொன்றிலிருந்து பிரதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் எந்தவிதமான அரச விரோத தகவல்களும் உள்ளடப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முடியுமாயின் குறித்த கடிதத்தை ஊடகங்களுக்கு வெளியிடுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த கடிதத்திலுள்ள விடயங்கள் தொடர்பிலோ கடிதம் விநியோகிப்பது தொடர்பிலோ தான் முன்னர் அறிந்திருக்கவில்லை எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...