சஹ்ரான் ஹாஷிமின் சகோதரியை கொழும்பு நீதிமன்ற வைத்தியர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு ...!


தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் ஹாஷிமின் டீ.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக அவரின் சகோதரியை கொழும்பு நீதிமன்ற வைத்தியர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிக்கு இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
அதன்படி தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் ஹாசிம் மதனியா என்பவரை இன்று 10ம் திகதி முதல் 15ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு நீதிமன்ற வைத்தியர் முன்னிலையில் ஆஜர்படுத்தி குறித்த டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...