தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

May 10, 2019

வாப்பாவின் பெயரை கூறமாட்டேன் என, சஹ்ரானின் நான்கு வயதான மகள் கூறியுள்ளார்..!“வாப்பாவின் பெயரை கூறமாட்டேன். வாப்பாவின் பெயரை சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என, சஹ்ரானின் நான்கு வயதான மகள் கூறியுள்ளார் என, அம்பாறை பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவராக மொஹமட் சஹ்ரான் என்பவரின் நான்கு வயது மகளான மொஹமட் சஹ்ரான் ருசேசினாவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான்கு வயதான அந்த பெண் பிள்ளையிடம், பாதுகாப்பு தரப்பினர் சில விடயங்களை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அம்பாறை சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்த சஹ்ரானின் மனைவி மற்றும் மகள், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு, கடந்த 8 ஆம் திகதி அழைத்துவரப்பட்டனர்.

அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைள் தொடர்பில் சஹ்ரானின் மனையான அப்துல் காதர் பாதிமா சாதியா என்பவர், மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை ​விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்த இவ்விருவரும் சஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தையென, சஹ்ரானின் சகோதரியும் ச​கோதருமே பாதுகாப்பு தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளையிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினர் ​ஒவ்வொரு நாளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Post Top Ad

Your Ad Spot

Pages