முஸ்லிம் தலைவர்களை விசாரணை செய்: தேசிய பிக்கு பெரமுன போர்க்கொடி

ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லா, அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் உட்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது தேசிய பிக்கு பெரமுன.

ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து தொடர் கைதுகள், விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் நெருக்கடி உருவாக்கப்பட்டு வருகிறது. 

இதன் பின்னணியில் முஸ்லிம் அரசியல்வாதிகளை விசாரிக்குமாறு பிக்கு பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு எதிரான விமர்சனங்களும் இவர்களால் பரவலாக ஊடகங்கள் ஊடாக முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

எனவே முஸ்லிம் அரசியல் தலைமைகளும், முஸ்லிம் மக்களும் இவர்களின் போர்க்கொடிகளை அவதானத்துடன் நெறிப்படுத்த வேண்டும். இவர்களின் அனைத்து எதிர் கோசங்களையும் மேற்குறித்த அரசியல் தலைவர்கள் நிராகரித்து வருவதும் இங்கு சுட்டிக்காட்டக்கூடியதாகும்.
முஸ்லிம் தலைவர்களை விசாரணை செய்: தேசிய பிக்கு பெரமுன போர்க்கொடி முஸ்லிம் தலைவர்களை விசாரணை செய்: தேசிய பிக்கு பெரமுன போர்க்கொடி Reviewed by Ceylon Muslim on May 06, 2019 Rating: 5