இஸ்லாமிய போதனைகளை அறியாதவர்களே, அடிப்படைவாதிகளாக மாற்றமடைந்துள்ளார்கள் - கோத்தபய


பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய  பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய  செயற்பாடுகள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  முன்னாள்  பாதுகாப்பு  செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ  தலைமையில் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கத்துவப்படுத்தி குழுவினை  நியமித்தார். 

இக்குழுவின் அறிக்கை இன்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவரது உத்தியோகப்பூர்வ  இல்லத்தில் வைத்து  கையளிக்கப்பட்டது.  

இவ்வறிக்கை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இஸ்லாம் மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையாக   போதனைகளை அறியாதவர்களே மதத்தை  முன்னிலைப்படுத்தி அடிப்படைவாதிகளாக மாற்றமடைந்துள்ளார்கள். அடிப்படையாத  கருத்துக்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் முழுமையாக  விடுப்பட வேண்டும்.  

யுத்தகாலத்தில் கைதுசெய்யப்பட்ட போராளிகளுக்கு புனருத்தாபனம் வழங்கப்பட்டு, அவர்கள் சமூகத்தோடு இணைத்துக் கொள்ளும்  நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வெற்றி கண்டது. இவ்வாறே அடிப்படைவாத கொள்கையால்  அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்றார்.

(இராஜதுரை ஹஷான்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...