BREAKING NEWS

May 10, 2019

ஹிஸ்புல்லாஹ்வை வீழ்த்த திட்டம் போடும் இனவாதிகள்!கலாநிதி ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது ஆளுமையினால் நாட்டிற்கும்' மூவின சமூகத்துக்கும் பயன்படக் கூடியதான சேவைகளையும் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் தூரநோக்கு சிந்தனையுள்ள நல்ல திட்டங்களையும் கொண்டுவரும் போது.

ஆளுனர் முஸ்லிம் எனும் ஒரேயொரு காரணத்துக்காக அதை தாங்க முடியாத சில இனவாத போக்குடைய அரசியல்வாதிகள் அதை தடுத்து நிறுத்துவதற்காக தாங்களால் முடிந்த அனைத்து நகர்வுகளையும் மறைமுகமாக நகர்த்தினார்கள். ஆனாலும் அவர்களின் சதித்திட்டம் எதும் கைகூடமல் போனது மட்டுமல்லாது! இறைவனின் உதவியோடு ஹிஸ்புல்லாஹ்வின் அதிகாரம் இன்னுமின்னும் கூடியது அல்ஹம்துல்லாஹ்.

இவ்வாறு கை பட்டாலும் குற்றம்' கால் பட்டாலும் குற்றம் என்று இருந்த நிலையில்தான்" அண்மையில் முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலரால் நாட்டில் அசாதர நிலமை ஏற்பட்டதை' தாங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட இனவாதிகள்.
எப்படியாவது ஹிஸ்புல்லாஹ்வை அதிகாரத்தில் இருந்து இறக்க வேண்டும், அரசியலில் இருந்து துரத்த வேண்டும், மக்களிடத்திலிருந்து தூரமாக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் வேதாளம் மரம் ஏறத் தொடங்கியதை இன்று பார்க்க முடிகிறது.

உண்மையில் நடந்த கொடூர தீவிரவாத செயற்பாட்டை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வெறுப்பது மட்டுமல்லாது' தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பாதுகாப்பு படையினருக்கு பக்கபலமாக இருந்து கொண்டு உறுதியோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது முழு நாடறிந்த விடயம்.

நடந்தேரிய சம்பங்களின் பின்னணியை ஆராய்வதற்கும், உரியவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கும் நாட்டின் சட்டம் இருக்கிறது, விசேஷட படையணி இருக்கிறது, புலனாய்வு பிரிவு செயற்படுகிறது அவர்கள் கடமையை திறன்பட செய்து" நாட்டை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதோடு மட்டுமல்லாது" உரிய கூட்டத்தையும் அடியோடு அழித்தொழிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இதுவே உண்மை.

ஆனால் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த இவ்வாறான இனவாத கழுகுகள்" கிழக்கை தன்வசப்படுத்த வேண்டும் என்று துடிக்கும் கறையான்கள் ஹிஸ்புல்லாஹ் அவர்களை தொடர்பு படுத்தி இல்லாத பொல்லாதைக் கூறி தமது இலக்கை அடைய தவிக்கிறார்கள்.
இதைப் பார்க்கும்போது உண்மையில் வேதனையாகவே இருக்கிறது. ஆளுனர் ஒரு முஸ்லிம் என்ற ஒரேயொரு காரணத்துக்காக இப்படி வட்டம் போட்டு திட்டம் தீட்டுகிறார்களே தவிர' வேறு எந்த நோக்கமும் இல்லை என்பது நண்றாக புரிகிறது.

ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மூவின சமூகத்தையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படுகிறார். இருப்பினும் இவ்வாறான இனவாதிகள் தமது நோக்கங்கள் நிறைவடைய வேண்டும் என்பதற்காக அவரை பிழையாக சித்தரித்து காட்டவே முனைப்பாக தொடர்ந்தும் செயற்படுகிறார்கள்.
அவர்களுக்கு உரம் ஊட்டும் முகமாக இனவாத ஊடகங்களை பயன்படுத்தி பாமர மக்கள் மத்தியில் திரிவுபடுத்தப்பட்ட செய்தியை கொண்டு சென்று எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிக் கொடுக்கிறார்கள் கண் கெட்ட ஊடகம்.

அல்லாஹ் போதுமானவன் ஆளுனரின் எண்ணமும் நோக்கமும் நல்லவையாக இருப்பதனால். நிச்சயம் அவருடைய சமூகத்துக்கான பயணம் சிறப்பாக பாதுகாப்பாக அமைய வேண்டும் என்பதே அமைதியை விரும்புவர்களின் எண்ணமாகும்.

இன்ஷாஅல்லாஹ் இப்படிப்பட்ட இனவாதிகளின் நாசகார திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகி இந்த நாட்டில் அமைதியும், மூவின சமூகங்களுக்கிடையில் நின்மதியும் ஏற்பட்டு ஒற்றுமையோடு வாழ்வதற்கு புனித ரமழான் மாதத்தில் கையேந்தி பிராத்திப்போம்.

ஒலுவில் ஜெலில்

Share this:

 
Copyright © 2014 Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA. Designed by | Distributed By