ஐஸ். பயிற்சி முகாம் காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள்..? அந்தரங்க இரகசியம்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் நேற்று சிக்கியது.15 ஏக்கர் பரப்பளவில் விவசாய பண்ணை போன்ற அமைப்பில், இந்த பயிற்சி முகாம் அமைந்திருந்தது.பயிற்சி முகாமின் முன் பகுதி பண்ணை போன்ற தோற்றமுடையது. தென்னை மற்றும் விவசாய பயிர்கள் நடப்பட்டுள்ளன.

ஆடு, கோழி, வான் கோழியென்பன வளர்க்கப்படுகின்றன. சாதாரண பார்வைக்கு அதை பண்ணையென தோன்றும் விதமாக பக்காவாக அமைத்திருக்கிறார்கள்.நேற்று பொலிசார் சோதனைக்கு சென்றபோது, வயதான முஸ்லிம் ஒருவர் அங்கு நின்றார். அவர்தான் பண்ணை பராமரிப்பாளர்.அங்குள்ள மிருகங்களை பராமரிப்பதும், விவசாய நிலங்களிற்கு தண்ணீர் ஊற்றுவதும்தான் தனது வேலை, இங்கு நடந்த வேறொன்றையும் அறியமாட்டேன் என்றார்.

ரில்வான் குழுவினர் பண்ணைக்கு வந்தால், பின்பகுதிக்கு சென்று அங்குள்ள கட்டடத்தில்தான் தங்குவார்கள், அங்கு என்ன நடக்கிறதென பார்க்க எனக்கு அனுமதியில்லையென்றார்.அந்த பயிற்சி முகாம் அமைந்த காணி, தமிழர் ஒருவருக்கு சொந்தமானது. தௌஹீத் ஜமா அத் அமைப்பினர், பினாமியொருவரின் பெயரில் அந்த காணியை வாங்கியுள்ளனர்.இந்த காணியை வாங்கிக் கொடுப்பதில் தமிழ் மக்கள் விடுதவைப்புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் ஈடுபட்டுள்ளார் காத்தான்குடி அரசியல் பிரபலத்துடன் தமிழ் மக்கள் விடுதவைப்புலிகள் கட்சி மிக நல் உறவில் உள்ளமை உலகறிந்த உண்மை அத மட்டுமல்லாது காத்தான்குடி அரசியல் பிரபலத்துக்காக தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்வர் பிள்ளையான் ஆனால் காத்தான்குடியில் பிள்ளையானிற்கு வாக்கு கேட்கவில்லை..

இப்படியான சூழ் நிலையில் பிள்ளையான் சிறையில் உள்ளதால் சஹரான் தம்பி ஊடாக கோடிக் கணக்கான பணத்தை வாங்கி கொண்டு பிரசாந்தன் தமிழரிடம் காணி வாங்க மூளைச் சலவை செய்து அதன் பின்ரே இந்த டீல்.. நடந்துள்ளது.

கூட்மைப்பு முஸ்லீமை முதலமைச்சராக்கியது மட்டும் தான் ஆனால் தமிழ் மக்கள் விடுதவைப்புலிகள் கட்சி மாவட்டத்தை விற்று விட்டது.ஆரையம்பதில் பிறந்த பிரசாந்தனிற்கு கூட்மைப்பின் வேட்டிக்குள் ஓடுவது எல்லாம் தெரியுது என்றால் அவரின் ஊரில் அருகில் உள்ள ஒல்லிக்குளத்திற்குள் நடந்த இந்த திருவிளையாடல் தெரியாதா...அது மட்டுமல்லாது வெலிக்கந்த - ஓமடியாமடு - புனானை பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதவைப்புலிகள் ஆயுதக் குழுவாக செயற்பட்டது இராணுவத்துடன் இணைந்து..

நேற்று ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் ஓமடியாமடுவில் சிக்கியது இக் காணியை வழங்கியவர்கள் விபரத்தை புலனாய்வுத் துறையினர் தேடிய போது TMVPயினரது சில தடயங்களும் சிக்கியுள்ளது.ஓமடியாமடு காணி வழங்கிய விவகாரத்தில் TMVPக்கு மறைமுக தொடர்பு உள்ளது நிரூபனமாகியுள்ளது.


சிந்திக்க தெரிந்த தமிழர்களிற்கு தெரியும் ஓமடியாமடு யாரின் தாய் நிலம் என்று இதை வழங்கியது யார் என்றும் புரியும்...இந்த செய்தியை பார்த்தவுடன் வரிந்து கட்டிக் கொண்டு TMVP செயலாளர் பிரசாந்தன் ஒரு கூ.. சத்தம் போடுவார்...

இந்த உண்மையை வெளிக் கொண்டு வராத வக்கற்ற ஊடகங்களும் TMVPயிடம் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தம் ஊடகவியலாளர்களும் வரிந்து கட்டிக் கொண்டு செய்தி அனுப்பி TMVP தமிழ் தேசியக் கட்சி தீய சக்திகளின் செயல் என மின்னல் வேகத்தில் செய்திகளை அனுப்புவார்கள் மைக்குகளை துாக்கி கொண்டு பெரிய ஊடகவியலாளர் மகாநாடு வேற சாப்பாட்டுடன்.. இப்படி செய்தி அனுப்புபவர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பவர்களா.. அப்படி TMVP - ISIS அமைப்பிற்கு ஆதரவாக செய்தி அனுப்பும் ஊடகவியலாளர்களின் விபரங்கள் புகைப்படத்தடன் அடுத்த பகுதியில் வெளியிட எமது செய்திப் பிரிவு தயார் நிலையில் உள்ளது.

ISIS முகாம் அருகில் வேறுசில காணிகளையும் வேறு சில முஸ்லிம்கள் வாங்கியுள்ளனர் அது அவர்களிற்கு தெரியாது என கூறப்படுகிறது...இரு IS முகாம்களை கைப்பற்றி இருப்பதாக படைத்தரப்பு உறுதிப்படுத்தி யுள்ளது.

இந்த இரண்டு முகாமும் அமைந்துள்ள பகுதி முஸ்லீம் பகுதியா? இல்லை முட்டாள் தமிழர்களே உங்களின் தாய் நிலம் எனவே இந்த காணிகளை யார் வழங்கியிருப்பார்கள் இந்த நாதியற்ற TMVPதான்...IS முகாமிருந்த அந்த பகுதியில் மக்கள் குடியிருப்புக்களும் குறைவு. இதனால் பயங்கரவாதிகளின் முகாம் பற்றிய சந்தேகம் யாருக்கும் எழவில்லை.இந்த முகாமில் குண்டு பரிசோதனை செய்தபோதே, ரில்வாக காயடைந்ததாக கூறுகிறார்கள். ரில்வானின் இரண்டு கை விரல்கள், ஒற்றை கண் இதில் பாதிப்படைந்தது.

காயமடைந்த ரில்வான் எங்கே வைத்திய சிகிச்சை பெற்றார் என்பது அடுத்த கேள்வி. இணையத்தளத்தை பார்த்து குண்டு தயாரித்ததாக பயங்கரவாதிகள் ஏற்கனவே வாக்குமூலமளித்துள்ளனர்.

வைத்திய சிகிச்சையும் இணையத்தளத்தை பார்த்தா எடுத்தார்கள் அல்லது வேறு வழிகளிலா என்பது போகப் போவத்தான் தெரியும்.ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்

மூலம். ஜெவிபிநியூஸ்
ஐஸ். பயிற்சி முகாம் காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள்..? அந்தரங்க இரகசியம்! ஐஸ். பயிற்சி முகாம் காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள்..? அந்தரங்க இரகசியம்! Reviewed by NEWS on May 07, 2019 Rating: 5