சிலைகளை உடைக்குமாறு சஹ்ரானே உத்தரவிட்டார் - 20 இலட்சம் சட்டத்தரணிகளுக்கு வழங்கினார்

மாவ­னெல்லை நகரை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில் நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­னது, உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாஷிமின் உத்­த­ர­வுக்­க­மை­யவே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. நேற்று மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று முற்­பகல் மாவ­னெல்லை நீதிவான் உப்புல் ராஜ­க­ருணா முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே, குறித்த விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யான சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க இதனை நீதி­வா­னுக்கு அறி­வித்­துள்ளார். இதன்­போது இந்த சிலை உடைப்பு விவ­கா­ரத்தை பூர­ண­மாக நெறிப்­ப­டுத்­தி­யுள்ள சஹ்ரான், அதனை முன்­னெ­டுத்த சந்­தேக நபர்­க­ளுக்கு ‘நீங்கள் போய் சிலை­களை உடைத்­து­விட்டு என்­னிடம் வாருங்கள்’ என கூறி­யுள்­ள­தா­கவும் சி.ஐ.டி.யின் விசா­ரணை அதி­காரி நீதி­மன்றின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­துள்ளார்.

இந்த சிலை உடைப்பு விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்த போது, நீதி­மன்றின் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஏற்­க­னவே விளக்­க­ம­றி­யலில் உள்ள 14 சந்­தேக நபர்கள் கடும் பாது­காப்­புக்கு மத்­தியில் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்­டனர். இத­னை­விட சி.ஐ.டி.யின் பிடியில் இந்த விவ­காரம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 20 சந்­தேக நபர்­களும் நேற்று விஷேட பாது­காப்­புடன் அழைத்து வரப்­பட்டு நீதி­வானின் மேற்­பார்­வைக்­காக ஆஜர் செய்­யப்­பட்­டனர். இந்த விவ­கா­ரத்தில் இது­வரை கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்கள் 34 பேராவர்.

இதன்­போது நீதி­மன்றின் பாது­காப்­புக்­காக மேல­தி­க­மாக இரா­ணுவம் வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­த­மையும் விஷேட அம்­ச­மாகும்.

இந் நிலையில் சந்­தேக நபர்­களை முன்­னி­லைப்­ப­டுத்­திய பின்னர் விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க மேல­திக விசா­ரணை அறிக்­கையை முன்­வைத்து விட­யங்­களை தெளி­வு­ப­டுத்­தினார்.

அதன்­படி, புத்தர் சிலை­களை தகர்க்கும் மேற்­படி செயற்­பா­டுகள் பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் பூரண மேற்­பார்வை மற்றும் உத்­த­ரவின் கீழ் இடம்­பெற்­றுள்­ள­தாக சி.ஐ.டி. அதி­காரி நீதி­மன்­றுக்கு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அத்­துடன் இந்த விவ­கா­ரத்தில் கைதாகி விளக்­க­ம­றி­யலில் உள்ள இப்­ராஹிம் மெள­லவி என்­ப­வ­ரது வீட்டில் இந்த சிலை உடைப்­புக்­கான வகுப்­புக்கள் சஹ்­ரா­னினால் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், வகுப்பின் முடிவில் சிலை­களை உடைத்­து­விட்டு நீங்கள் மீண்டும் என்­னிடம் வாருங்கள் என சஹ்ரான் அங்­கி­ருந்த தனது சகாக்­க­ளுக்கு கூறி­யுள்­ள­தா­கவும் சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்த அதி­காரி நீதி­மன்­றுக்கு சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­விட சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் சந்­தேக நபர்கள் சிலர் சில நாட்­களில் கைதான நிலையில் அந்த சந்­தேக நபர்­களை பிணையில் விடு­வித்­துக்­கொள்ள சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு வழங்­கு­மாறு கூறி சஹ்ரான் 20 இலட்சம் ரூபா பணத்தை இப்­ராஹிம் மெள­லவி எனும் சந்­தேக நப­ருக்கு கொடுத்­துள்­ளமை தொடர்­பிலும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அது குறித்து மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் அந்த அதி­காரி நீதி­மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில் விளக்­க­ம­றி­யலில் உள்ள சந்­தேக நபர்கள் 14 பேரையும் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை மீள விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்ட நீதிவான் உப்புல் ராஜ­க­ருணா, தடுப்புக் காவலில் உள்ள சந்­தேக நபர்கள் 20 பேரையும் மீள நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசாரிக்கவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி அவர்களை மேற்பார்வைக்காக மீள நீதிமன்றில் ஆஜர் செய்யவும் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த விவகார விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை அழிக்க, கேகாலை அதிரடிப்படை கட்டளைத் தளபதிக்கும் இதன்போது நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பித்தது.
சிலைகளை உடைக்குமாறு சஹ்ரானே உத்தரவிட்டார் - 20 இலட்சம் சட்டத்தரணிகளுக்கு வழங்கினார் சிலைகளை உடைக்குமாறு சஹ்ரானே உத்தரவிட்டார் - 20 இலட்சம் சட்டத்தரணிகளுக்கு வழங்கினார் Reviewed by NEWS on June 14, 2019 Rating: 5