கண்டியில், 7ம் திகதி 10ஆயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டும் ஞானசார தேரர்பௌத்த துரவிகள் பத்தாயிரம்பேரை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு - குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்...

எதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார.


ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து எழுந்துள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அடிப்படைவாதத்தை களைய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என தெரிவித்து வரும் ஞானசார குறித்த தினம் எதிர்கால இலங்கைக்கான வேலைத் திட்டம் ஒன்றை முன் வைக்கப்போவதாக ஞானசார தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, தற்போது, பௌத்த துறவிகள் நேரடியாகவே முஸ்லிம் ஊர்களுக்குச் சென்று அல்-குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பையும் ஏற்க நேரிட்டுள்ளதாகவும் ஜுலை 7ம் திகதி இவ்வாறு பெருந்தொகை துறவிகளைக் கொண்டு மாநாடு நடாத்தி இது பற்றி தெளிவுபடுத்தவுள்ளதாகவும் ஞானசார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கண்டியில், 7ம் திகதி 10ஆயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டும் ஞானசார தேரர் கண்டியில், 7ம் திகதி 10ஆயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டும் ஞானசார தேரர் Reviewed by NEWS on June 15, 2019 Rating: 5