குண்டுத்தாக்குதல் சம்பவம்: 77 பேர் CID யிடம்; 25 பேர் TID யிடம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களில் 102 பேர் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

அவர்களில் 77 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 25 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...