தங்கொட்டுவவில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய தடை : மஹிந்த கட்சி

பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கொட்டுவ வாரச் சந்தையில் வியாபாரம் செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வென்னப்புவ பிரதேச சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பான சபையின் தீர்மானத்தை சபைத் தலைவர் சுசந்த பெரேரா வென்னப்புவ பிரதேச அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

தங்கொட்டுவ வாரச் சந்தையின் பாதுகாப்பு தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச சபை பொதுஜென பெரமுன கட்சியின் அதிகாரத்தின் கீழ் உள்ளதும் குறிப்பிடத்தக்கது, 
தங்கொட்டுவவில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய தடை : மஹிந்த கட்சி தங்கொட்டுவவில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய தடை : மஹிந்த கட்சி Reviewed by NEWS on June 25, 2019 Rating: 5