இந்து, பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்; ரத்ன தேரர் அழைப்பு..!

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அழிக்க இந்து, பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

நாட்டில் இன்று இந்து மற்றும் பௌத்த மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். 

பல இடங்களில் சத்திரசிகிச்சை என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் மற்றும் பௌத்த பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது எனவும் இவ்வாறான நிலையில், இந்து மற்றும் பௌத்த மக்கள் ஐக்கியப்படுவது நாட்டுக்கு அவசியம் எனவும் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்து, பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்; ரத்ன தேரர் அழைப்பு..! இந்து, பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்; ரத்ன தேரர் அழைப்பு..! Reviewed by NEWS on June 14, 2019 Rating: 5