தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 20, 2019

தமிழர்களின் நியாயமற்ற போராட்டத்திற்கு எதிராக முஸ்லீம் மக்கள் போராடத்தை ஆரம்பித்தனர்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு கோரி தேரர் தலைமையிலான தமிழர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழர்களுக்கு உரிமை கிடைத்து விடக் கூடாது என்ற கோஷத்துடன் முஸ்லிம் மக்களும் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு முரணாக செயற்படும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை மூடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழர்களின் போராட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கல்முனை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இரு தரப்பினருக்கு இடையில் நடைபெறும் போராட்டம் காரணமாக கல்முனையில் குழப்பகரமான சம்பவங்கள் இடம்பெறலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்முனையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.ரஹ்கீப், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரிப்சம்சுடீன் போன்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Post Top Ad

Your Ad Spot

Pages