இன்ரபோலின் எச்சரிக்கை நபர்: மில்ஹான் இவர் தான்...இலங்கை தற்கொலை தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரிகளில் ஒருவரான மில்ஹானை கைது செய்தமை விசாரணைகளில் பெரும் முன்னேற்றத்தைக் கொடுக்குமென இன்ரபோல் தெரிவித்துள்ளது.

சர்வதேச பொலிஸ் நிறுவகமான இன்ரபோலின் செயலாளர் நாயகம் ஜூர்கன் ஸ்ரொக் கருத்து வெளியிடும்போது , மில்ஹானை கைது செய்யும் சிவப்பு அறிவித்தலை இன்ரபோல் வெளியிட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

இலங்கையில் இந்த தாக்குதல் விசாரணைகளின் முன்னேற்றத்திற்கு இன்ரபோல் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்ரர் தின தாக்குதல்கள் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்பட்ட மில்ஹான் உட்பட ஐந்து பேர் நேற்று இலங்கை கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...