முஸ்லிம்களுக்கு தடை விதித்த மொட்டு கட்சி, வெட்கப்படுகின்றேன் என்கிறார் டளஸ்

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் தாம் வெட்கமடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ உடனடியாக இது தொடர்பில் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தமது நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள சபையினால் இதுபோன்றதொரு கடிதம் வௌியிடப்பட்டமை தொடர்பில் தாம் வெட்கமடைவதாக அவர் கூறினார். 

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வென்னப்புவ பிரதேச சபை தவிசாளர் கே.வி சுசந்த தடை விதிப்பதாக தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு தடை விதித்த மொட்டு கட்சி, வெட்கப்படுகின்றேன் என்கிறார் டளஸ் முஸ்லிம்களுக்கு தடை விதித்த மொட்டு கட்சி, வெட்கப்படுகின்றேன் என்கிறார் டளஸ் Reviewed by NEWS on June 27, 2019 Rating: 5