அமைச்சு பதவியை எடுப்பதற்கு அவசரமில்லை : ரிஷாத் பதியுதீன்

அனைத்து விசாரணைகளும் முடிவுற்று முழுமையான அறிக்கை வெளியான பின்னரே அமைச்சுப் பதவியை மீளப்பெறுவது குறித்து தாம் சிந்திக்கப் போவதாக தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.

ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு எதிரான தீவிரவாத குற்றச்சாட்டுக்களை பெறுவதற்கென நியமிக்கப்பட்டிருந்த விசேட பொலிஸ் குழுவிடம் அவ்வாறு ஒரு முறைப்பாடேனும் முன் வைக்கப்படவில்லை. எனினும், வேறு முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, தீவிரவாதிகள் பயணிப்பதற்கு சதொச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக போலியாக பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையிலேயே, அனைத்து விசாரணைகளும் முடிவுற வேண்டும் என ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளதுடன் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு துரிதமாக அறிக்கையை வெளியிடும்படி கோரப் போவதாக முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி சகோதர இணையத்தளமொன்றிற்கு  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சு பதவியை எடுப்பதற்கு அவசரமில்லை : ரிஷாத் பதியுதீன் அமைச்சு பதவியை எடுப்பதற்கு அவசரமில்லை : ரிஷாத் பதியுதீன் Reviewed by NEWS on June 24, 2019 Rating: 5