தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 16, 2019

சம்மாந்துறையில் பொசன் கொண்டாங்கள்

இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷுரா இணைந்து ஏற்பாடு செய்த பொசன் பண்டிகை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திலும் மற்றும் பிரயோக விஞ்ஞான பீடத்திலும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை விகாரையின் விகாராதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.ஐ.எம். மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.இஸ்மாயிலின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி யூ.எல்.எம். சமீம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இப்னு அஸார், சம்மாந்துறை பிரதம நம்பிக்கையாளர் எம்.கே.எம். முஸ்தபா, மஜ்லிஸ் அஷ்ஷுரா சபை தவிசாளர் ஐ.ஏ. ஜப்பார் உட்பட முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 


இந் நிகழ்வில் பொசன் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட 'தன்சல' தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
Post Top Ad

Your Ad Spot

Pages