தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 16, 2019

மோடியின் பிறந்த நாளன்று, நாமலுக்கு திருமணம்!எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு செப்ரெம்பர் 17ஆம் நாள் திருமணம் நடைபெறவுள்ளது.

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, தனக்குத் திருமணம் நடைபெறவுள்ளது குறித்து அவர், தகவல் வெளியிட்டுள்ளார்.

செப்ரெம்பர், 17ஆம் திகதி தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச கூறியதும், எதற்காக அந்த நாளை தெரிவு செய்தீர்கள் என்று இந்தியப் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு நாமல், சாதாரணமாக ஒரு நாளை தெரிவு செய்ததாக குறிப்பிட்டார்.அப்போது, இந்தியப் பிரதமர் மோடி, “ஏன் அவ்வாறு கேட்டேன் என்றால், அன்று தான், (செப்ரெம்பர் 17) எனது பிறந்த நாள்” என்று மோடி பதிலளித்துள்ளார்.

மணப்பெண் யார்?

நாமல் ராஜபக்சவை திருமணம் செய்து கொள்ளவுள்ள மணப்பெண், நன்கு அறியப்பட்ட விளையாட்டு ஆர்வலரும், லங்கா ஸ்போர்ட்ஸ் ரைசனின் (எல்.எஸ்.ஆர்) நிறுவுநருமான திலக் வீரசிங்கவின் ஒரே மகள், ஆவார்.

இவரது, தாயார் அருணி விக்ரமரத்ன, தேசிய அளவிலான ஓட்ட சாம்பியனாவார். இவர்கள், ஒன்பது விடுதிகளை நடத்தி வருகின்றனர்.

Post Top Ad

Your Ad Spot

Pages