முஸ்லிம் உரிமையாளர் ஒருவர் கொழும்பில் சற்றுமுன் குத்திக்கொலை

–அஷ்ரப் ஏ சமத் –

பட்டப் பகலில் இனம் தெரியாத நபா் தெகிவளையில் உள்ள ஹார்ட்வெயார் ஒன்றில் (முஸ்லிம் உரிமையாளரிடம் ) கப்பம் கேட்டுள்ளாா் கொடுக்க மறுத்தால் கடை உரிமையளரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் உள்ள காலி வீதியில் உள்ள ஜெயலங்கா காட்வெயா உரிமையாளரான அப்துல் அசீஸ் வயது 60 என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளாா். 

இச் சம்பவம் இன்று (24) -பகல் 3மணிக்கு நடைபெற்றுள்ளது. 


தெகிவளை பொலிசாா் விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனா்.அப்துல் அசீஸ் களுபோவிலை வைத்தியசாலையில் கொண்டுசெல்லும்போதே இறந்துள்ளாா். 

சம்பவம் நடைபெற்ற நேரத்திலேயே அவர் தனியே காட்வெயரில் ்இருந்துள்ளாா். கப்பம் கேட்டவா் உடன் கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடியதாகவும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவா் கடையில் உள் கதறியிருக்கின்றாா். 


அதன் பின்னரே அவரை வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...